திருப்பம் வெற்றியின் விருப்பம்
மெர்வின்
வாழ்க்கைத் திருப்பம் என்பது என்ன? இந்த வினாவுக்கு விடையை கண்டுபிடித்து
விட்டால் நாம் நிச்சயமாக வெற்றி வீரர்களாக திகழ முடியும்.
முந்திய நாள் பயிற்சியால் பலனைக் கொண்டு வரும் சந்தர்ப்பம் நம்முடைய திருப்பமாக
அமையும்.
அதைப் பற்றிப் படித்துப் பயன்படுத்திக் கொள்ளாமல் இருந்தால், அது வந்தும்
ஒன்றுதான். வராமல் இருந்தும் ஒன்றுதான்..
அதனால் நாம் நன்கு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும். நான்கு விஷயங்கள்
திரும்பி வராது. அவை என்னவென்றால் -
வாயிலிருந்து வெளி வந்த வார்த்தை எய்தப்பட்ட அம்பு. சென்று போன வாழ்நாள்
அலட்சியப்படுத்தப்பட்ட சந்தர்ப்பம்.
பிரெஞ்சு நாட்டில் கலகம் ஏற்பட்டபோது, அக்கலகத்தை அடக்கும் திறன் படைத்தவரை
நான் அறிவேன் என்றார் ஒருவர்.
உடனே அவரை அழைத்து வாருங்கள் என்று கட்டளையிட்டார் தளபதி. விரைந்து சென்று
நெப்போலியனைக் கூட்டிக் கொண்டு வந்தார்.
நெப்போலியன் படை வீரர்கள் முன்பு வந்து நிமிர்ந்து நின்றார். ஒரு நிமிடத்தில்
நெப்போலியனிடம் பிரான்ஸ் நாட்டின் விதியைத் தீர்மானிக்கும் பொறுப்பு அவரிடம்
ஒப்படைக்கப்பட்டு விட்டது.
இதற்குக் காரணம் நெப்போலியன் அப்படிப்பட்ட சந்தர்ப்பத்தைச் சமாளிப்பதற்கு ஏற்ற
பயிற்சி பெற்று தயாராக இருந்தது தான்.
நம் முன்னே உள்ள கதவு தாளிடப் பட்டிருப்பின் அதற்கும் நாம்தான் காரணம். அதனை
மூடி வைத்து விடுகிறோம்.
அப்படி மூடிவிடுவதற்கு அடிப்படையாக அமைவது எதுவென்றால் திறமையின்மை. முடியும்
என்ற உறுதியின்மை, ஆர்வமின்மை ஆகியவைதான்.
அதிர்ஷ்டம் வந்து அதைத் திறக்க வேண்டுமென்று நாம் காத்துக் கொண்டிருக்கும்
பொழுது வைராக்கியம் படைத்த வீரன் அதனைத் திறந்து முன்னேறிவிடுகிறான்.
அதிர்ஷ்ட அலை வீரனின் லட்சியத் துறை முகத்தை நோக்கி அடிக்கும் பொழுது அவனும்
அத்திசையை நோக்கி படகைச் செலுத்துகிறான்.
அது அவனை எதிர்த்து அடித்தால் அவனும் அதனை எதிர்த்துப் படகைச் செலுத்துகிறான்.
இறுதியில் வெற்றியும் பெறுகிறான்.
ஓட்டப்பந்தயத்தில் சில குதிரைகள் வெற்றி பெறவும், பல குதிரைகள் தோல்வி அடையவும்
காரணம் என்ன? அவற்றுக்குத் தொடர்ந்து பயிற்சி தந்ததுதான்.
அதே மாதிரி நாமும் வாழ்க்கைப் போராட்டத்தில் முதல் இரண்டாவது போட்டியில்
தோற்றுவிடுவோமானால் கஷ்டகாலம் என்று கூறி முழங்காலைக் கட்டிக் கொண்டு
இருக்கவேண்டாம்!
பலம் வாய்ந்த படைப்பின் பக்கமே இறைவன் எப்பொழுதும் இருக்கிறான் என்ற உண்மையை
உணர்ந்து கொள்ள வேண்டும்.
யார் தனக்குதான் பயிற்சி அளித்துக் கொள்கிறார்களோ, யார் தன்னைப் பலப்படுத்திக்
கொள்கிறார்களோ, யார் ஜாக்கிரதையுடன் இருக்கிறார்களோ- யார் உள்ள உறுதி
கொண்டிருக்கிறார்களோ அவர்கள் பக்கமே இறைவன் எப்பொழுதும் இருக்கிறான்.
அதிர்ஷ்டசாலிகள் என்று கருதப்படுவோரின் வாழ்க்கையை நாம் ஆராய்ந்து பார்த்தால்
அவர்களுடைய வெற்றியானது எதிர்ப்பு வறுமை ஆகியவற்றோடு அவர்கள் நடத்திய
போராட்டத்திலிருந்து வெளியே வந்து இருப்பதை அறிய முடியும்.
அவர்களுடைய வாழ்வில் ஒரு ஒழுங்கையும் உறுதி உணர்வும் விடாமல் கைப்பற்றி
வந்திருக்கிறார்கள் என்ற உண்மையையும் உணர இயலும்.
நம்முடைய சொந்த முயற்சிகளை கொஞ்சம் பொருட்படுத்தாது நம்மை அங்கும் இங்கும்
தள்ளப்படும் சதுரங்க காய்களாக நாம் படைக்கப்படவில்லை.
இளம் டாக்டர்கள் ஐந்து ஆண்டுகாலம் படித்துப் பரிசோதனை நடத்த வாழ்நாளைக் கழித்து
வரும்பொழுது-
திடீரென்று அவர்களின் முன்பே பெரிய அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்தால்,
துணிவுடன் எந்த மருத்துவர் முன்வந்து செய்கிறாரோ, அவர்தான் புகழ் பெறுவார்.
நிபுணர் என்ற பட்டமும் வாங்குவார். அதுவே அவருக்கு அற்புதமான வாழ்க்கையை
அமைத்துக்கொடுக்கும்.
நான்காம் ஜார்ஜ் மன்னர் ஒருநாள் வெளியே சென்றிருந்த பொழுது திடீரென்று மயக்கம்
ஏற்பட்டுவிட்டது.
பக்கத்தில் நின்று கொண்டிருந்த நாட்டு வைத்தியர் அவருக்குச் சிகிச்சை செய்து
சுகப்படுத்தி விட்டார். மன்னருக்கு அவர் மீது ஏற்பட்ட மதிப்பிற்கு அளவே இல்லை.
உடனே அரசர் அவரை தன்னுடைய சொந்த மருத்துவராக நியமித்து விட்டார். தகுந்த
திருப்பதை சரியானபடி பயன்படுத்தினால் எந்தச் சூழ்நிலையிலும் நாம் இருந்தாலும்
நிச்சயமாக வெற்றி பெற முடியும்.
எந்த நேரத்திலும் எந்தக் காலத்திலும் திருப்பம் அமையக்கூடும். அதனால் நாம் முன்
ஜாக்கிரதையுடன் இருந்தால் திருப்பத்தைக் கைப்பற்றி செயல்பட்டு சாதனையாளராக மாற
முடியும்.

0 comments:
Post a Comment