1. உடல்பயிற்சியும் சிறந்த உணவும் நாள்தோறும் குறைந்தது 15 நிமிட உடற்பயிற்சியும் சிறந்த ஆரோக்கியமான
உணவுகளும் மூளையின் திறனை விருத்தி செய்ய உதவும். உங்கள் உடலும்
மனதும் உற்சாகத்தோடு இருக்கும் பொது மூளையும் சிறப்பாக தொழிற்படும்.
2. தியானம் உங்கள் மனதில் உள்ள பல்வேறுபட்ட அழுத்தங்கள் , கவலைகள் எங்கள் மூளையை சிறப்பாக செயற்பட அனுமதிப்பதில்லை எனவே மன அழுத்தங்கள் குறைக்க தியானம் செய்வதன் மூலம் மன அழுத்தங்களை குறைத்து கொள்ள முடியும்.
3.மூளைக்கான சிறப்பு பயிற்சிகள் செய்தல் அதாவது மூளையின் நுண்ணாய்வு திறனை அதிகரித்துக்கொள்ள சிறந்த பயிற்சிகள் வேண்டும் . இதற்கு உதவுகிறது ஓர் இலவச இணையம் LUMOSITY இந்த தளத்தில் மூளைக்கான விசேட பயிற்சிகள் உண்டு .
4. ஏதாவது ஓர் தலைப்பில் விரிவாக எழுதுங்கள். உங்களை கவர்ந்த அல்லது பிடித்த விடயம் பற்றி உங்களுக்கு தெரிந்தவற்றை கொண்டு விரிவாக எழுதி பழகுங்கள் . இதனால் உங்கள் அறிவுத்திறன் மேம்படவும் சிந்திக்கும் திறனும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது .
5.நாள்தோறும் எளிய கணித பயிற்சி நாளாந்தம் எளிய கணித பயிற்ச்களை மேற்கொள்ளுங்கள் .
6.புதிர்கணக்கு SUDOKO எனப்படும் புதிர்கனக்குகள் செய்து பாருங்கள் .இதனால் பிரச்சனைகளை திற்கும் ஆற்றல் மேம்படும் .
7.நாள்தோறும் ஒன்றை பற்றி அறியுங்கள் நாளாந்தம் புதிதாக ஒன்றை பற்றி விரிவாக அறியுங்கள் . இதற்கு புத்தகங்கள் மற்றும் பல இணையங்கள் உதவுகின்றன
0 comments:
Post a Comment